Tuesday, 9 June 2009

வாழ்வியல் உண்மைகள் - ஒரு கிரிக்கெட் பார்வை


பதிவு ஆரம்பிக்கும் போதே தொடங்கிட்டான்யா என்று நீங்கள் கூறப்படாது. நமது முன்னோர்கள் நமக்கு விட்டு சென்ற அழியா சொத்துகளில் ஒன்று பழமொழிகள், உவமைகள் இவை போன்ற விலை மதிக்க முடியாத சொத்துக்கள். எனவே உவமைகளினூடாக வாழ்வியல் பார்வைகளை சிந்திக்கும் போது, விடயங்களை இலகுவில் புரிந்து கொள்ள முடியும் என்ற எண்ணம் தான். பாமர மக்களும் அறிந்து கொள்ள கூடிய வகையில் செதுக்கப்பட்ட தமிழ் இலக்கணங்களில் இதுவும் ஒன்று - உவமை. சரி கிரிக்கெட் இலிருந்து எப்படி வாழ்வியல் உண்மைகள்….

நேற்று நடந்து முடிந்த விறுவிறுப்பான ஆஸ்திரேலியா ஸ்ரீலங்கா கிரிக்கெட் போட்டியை பார்த்திருப்பீர்கள் என்ற நம்பிக்கை. எவளவு தான் அரசியல் முரண்பாடுகள் இருந்தாலும் ஸ்ரீலங்கா விளையாடுது எண்டேக்க ஒரு இனம் தெரியாத சப்போர்ட் உள்ளுக்குள்ள இருந்து வந்திடுது. (சிலர் ஸ்ரீ லங்கா நாட்டுக்காக சப்போர்ட் சிலர் ஆஸ்திரேலியா எதிர்ப்பு சப்போர்ட் anti-Australian support) நேற்று நடந்த ஆஸ்திரேலியா ஸ்ரீலங்கா கிரிக்கெட் பல கோணங்களில் முக்கியத்துவம் வாய்ந்தது. ஒன்று ஆஸ்திரேலியாக்கு வாழ்வா சாவா போட்டி. மற்றையது ஸ்ரீலங்காவின் முதல் போட்டி இந்த தொடரில். அணிதலைவர்களை பொறுத்தவரையில் ஆஸ்திரேலியா கேப்டன் ரிக்கி போண்டிங்கு இது ஒரு முக்கிய போட்டி. தன் மேல் இருக்கும் விமர்சனங்களுக்கு முற்று புள்ளி வைக்க ஒரு முக்கிய போட்டி. ஸ்ரீலங்காவை பொறுத்த வரையில் சங்கக்கார தலைமையிலான முதல் போட்டி.

ட்வென்டி ட்வென்டி விறு விறுப்புகெண்டால் பஞ்சம் இல்லை. ஆட்டம் நல்லா நடந்தது. தில்ஷன் மென்டிஸ் முரளி (கடைசி ஓவர் தவிர) மற்றும் முபாரக் ஆட்டங்கள் பிரமாதம். சங்கக்காரவின் தலைமைத்துவம் அபாரம். அதிலும் முதல் ஓவர்களில் அனுபவம் அற்ற பந்துவீச்சாளர்களை போட்டு தலைவர்களுக்கே உரித்தான ரிஸ்க் எடுக்கிற துணிச்சலை காடிட்டார்.(வடிவேலு சொல்ற மாதிரி ரிஸ்க் எடுகிறதேல்லாம் றஸ்க் சாப்பிற மாதிரி) ஸ்ரீ லங்கா வெண்டிட்டு. ஆஸ்திரேலியா வெளிய போய்டுது. 2007 உலக கிண்ண இறுதி போட்டி தோல்விக்கு சரியான பதிலடி எண்டு சிலர் சொல்லினம். பாவம் பொண்டிங்கின் முகத்தை பார்க்க முடியவில்லை. கிரிக்கெட் ல இதெல்லாம் சகஜமப்பா. (அரசியல்லயும் தான்)

இதில என்ன வாழ்வியல் தத்துவங்கள் பொதிஞ்சிருக்கு. பொறுங்கோ வாரன். போட்டி முடிஞ்சதும் இயன் சப்பேல் சொன்னது போல. வெற்றி ஸ்தானத்துக்கு போறது ரொம்ப ஈசி. அந்த இடத்தை ரொம்ப காலத்துக்கு தாக்கு பிடிச்சு வச்சிருக்கிறது தான் கஷ்டம். நல்ல நிலைக்கு போனதுக்கு பிறவு எல்லாரும் உங்களை எப்படா சூட் (டுமீல்) பண்ணலாம் எண்டு பாத்துகிட்டு இருப்பாங்க. அது போல தான் அந்த நெருக்கடி மிக்க காலத்தில பேசாம சய்லேண்டா(silent) இருந்து எப்பிடி திரும்ப முன்னுக்கு வாறம் என்றது தான் கிரிக்கெட்ல ஆஸ்திரேலியாகும் , அரசியல்ல பின்னடைவ சந்திசிருக்கிற இயக்கங்களுக்கும் வாழ்கைல வாசிச்சுக்கிடிருக்கிற உங்களுக்கும் நான் கோடிட்டு காட்ட விரும்பிற யதார்த்தம். எல்லாமே நமக்கு கிடைச்சு, எல்லாமே வெற்றி எண்டா வாழ்கைல சுவாரசியம் இருக்காது.(ரஜனி சொல்ற மாதிரி) சாதனை எப்பையா வரும்? சோதனை வந்தா தான் யா சாதனை வரும்.

வெற்றிகளின் போது தோல்வியின் போது பட்ட வலிகளையும், தோல்விகளின் போது வெற்றி தர போகும் சந்தோஷங்களையும் நினைச்சு பார்த்தால் வாழ்வு என்றும் நிம்மதியை தரும். இது தான் கிரிக்கெட் எனக்கு சொல்லி தரும் வாழ்வியல் உண்மைய்ங்க.

கருத்துகளை களமாடனும் அது தான் எங்க விருப்பம். பதிவுகளை போடுங்க.அப்போது தான் சூடான அரசியலுக்கு நாங்களும் ஷிபிட்(Shift) ஆக முடியும்.... சரி இப்போதைக்கு நான் எஸ்கேப் படு ஜுட்....

No comments:

Post a Comment